search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசேனா விமர்சனம்"

    பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்டுகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்கு மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கூறுவது முட்டாள்தனமான கூற்று என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. #ShivSena #PMModi
    மும்பை:

    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும், அவரது அரசை வீழ்த்துவதற்கு மாவோயிஸ்டுகள் சதிவலை பின்னி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதில், சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறி சமீபத்தில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேரை மராட்டிய போலீசார் கைது செய்தனர்.

    ஆனால், இதை விமர்சித்து பா.ஜனதா ஆதரவு கட்சியான சிவசேனா கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்கு மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக கூறி இருப்பது ஒரு முட்டாள்தனமான கூற்றாகும்.



    பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்டுகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அப்படியே அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் பிரதமரின் பாதுகாப்பை வலுப்படுத்தி கொள்ளட்டும்.

    மாவோயிஸ்டுகளால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கவலைப்பட வேண்டியதில்லை.

    மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை மக்கள்தான் வீழ்த்தினார்கள். மாவோயிஸ்டுகள் வீழ்த்தவில்லை.

    மாவோயிஸ்டுகளுக்கு இதுபோல் சக்தி இருந்தால் மேற்கு வங்காளம், திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அவர்கள் தங்கள் கட்டுப்பாடுகளை இழந்திருக்க மாட்டார்கள்.

    தவறான தகவல்களை போலீசார் பரப்புவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மோடியையும், பா.ஜனதாவையும் பரிகாசிக்கும் நிலை ஏற்பட்டு விடும். மோடி பாதுகாப்பு சம்பந்தமாக எந்த கவலையும் பட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ShivSena #PMModi

    ×